உள்நாடு 

ஹம்பகமுவ பகுதியில் சட்டவிரோதமாக பயிரடப்பட்ட 70 பேர்ச் கஞ்சா தோட்டம் முற்றுகை…..

ஹம்பகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகுனுதென்ன பகுதியில் சட்டவிரோதமாக பயிரடப்பட்ட 70 பேர்ச் கஞ்சா தோட்டத்தினை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டுள்ளனர். உடவளவ பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்று மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சட்டவிரோதமாக பயிரடப்பட்ட 258.714 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், மூன்று சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் சந்தேக நபர்களிடமிருந்து உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றும் இதன்போது மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர்கள் 25,30 மற்றும் 44 வயதுடைய ஹம்பேகமுவ, பலாங்கொட மற்றும் தனமல்வில பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஹம்பகமுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததுடன், பொலிஸார் அவர்களை இன்றைய தினதம் வெல்லவாய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுத்திருந்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பேகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment