Latest | சமீபத்தியது சினிமா 

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து செய்யவில்லை.. வெளிவந்த அடுத்த ஷாக்கிங் செய்தி

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் 18 வருட திருமண வாழ்க்கையை முறித்துக்கொள்ள போவதாக இரு தினங்களுக்கு முன் அறிவித்திருந்தனர்.

இவர்களின் விவகாரத்து செய்தி, ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகை சேர்ந்த பலரையும் அதிர்ச்சியில் மூழ்கடித்தது. இந்த விவாகரத்து முடிவை இருவரும் 2 வாரங்களுக்கு முன்பே எடுத்துவிட்டார்களாம்.

கருத்து வேறுபாடு காரணமாகவே இந்த விவகாரத்து ஏற்பட்டுள்ளதாம். இருவரின் கருத்து வேறுபாட்டை பற்றி தெரிந்துகொண்ட நடிகர் ரஜினி, இருவரிடமும் தனித்தனியாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ளாராம்.

2 குழந்தைகளையும் நினைவில் வைத்துக்கொண்டு இறுதி முடிவை எடுங்கள் என்று கூறியுள்ளாராம். ஆனால், ரஜினியின் பேச்சை ஏற்றுக்கொள்ளாமல், இருவரும் விவகாரத்து என்று முடிவை எடுத்துள்ளனர்.

இந்நிலையில், விவாகரத்து முடிவில் தீடீர் திருப்பமாக தனுஷின் தந்தை, இயக்குனர் கஸ்தூரி ராஜா தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.அதில், ” இருவரும் விவாகரத்து செய்யவில்லை. கணவன் மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுதான். இது வெறும் குடும்ப சண்டை விரைவில் சரியாகிவிடும். விரைவில் நல்ல செய்தி வரும் ” என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Related posts

Leave a Comment