உள்நாடு 

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: கொவிட் தொற்றுக்குள்ளான மாணவர்களுக்காக 108 பரீட்சை மத்திய நிலையங்கள்….

2021 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்க்கொள்ளும் மாணவர்கள் எந்தவித அச்சமும் இன்றி பரீட்சைக்கு தோற்றுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் எல். எம். டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) நடைபெற்ற நிகழ்வொன்றில் பரீட்சை ஆணையாளர் நாயகம் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், இந்த பரீட்சையில் சிங்கள மொழி மூலம் 2 இலட்சத்து 55 ஆயிரத்து 63 பேரும், தமிழ் மொழியில் 85 ஆயிரத்து 446 பேரும் தோற்றவுள்ளனர். மொத்தமாக 3 இலட்சத்து 40 ஆயிரத்து 508 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைவாக 2,943 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது. கொவிட் தொற்றுக்குள்ளான மாணவர்களுக்காக 108 பரீட்சை மத்திய நிலையங்கள் செயற்பட இருப்பதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் கூறினார்.

எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், புலமைப்பரிசில் பரீட்சை வழமைப்போன்று ஞாயிற்று கிழமை நடைபெறாது என்றும் ஜனவரி மாதம் 22 ஆம் திகதி சனிக்கிழமை 9.30 பரீட்சை ஆரம்பமாகவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

Related posts

Leave a Comment