Sport | விளையாட்டு உள்நாடு 

தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களால் வீடு கையளிப்பு…

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் 2020 ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனையை நிலைநாட்டி தங்கப்பதக்கம் வென்ற தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (19) புதிய வீடு ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார்.

இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் தலையீட்டின் பேரில் பெற்றுக் கொடுக்கப்பட்ட வீட்டுக்கான அன்பளிப்பு பத்திரம், தங்கப்பதக்கம் வென்ற வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு அலரி மாளிகையில் வைத்து பிரதமரினால் வழங்கி வைக்கப்பட்டது.

உலக சாதனையை நிலைநாட்டி இலங்கைக்கு தங்கப்பதக்கம் வென்று கொடுத்த தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு புதிய வீடொன்றை பெற்றுக் கொடுப்பதாக கடந்த செப்டம்பர் 8ஆம் திகதி பிரதமர் குறிப்பிட்டிருந்தார். அதற்கமைய நேற்று குறித்த வீடு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment