Latest | சமீபத்தியது உள்நாடு 

பாடசாலை மாணவிகளின் தலைமுடியை வெட்டிவந்த மர்ம நபர் சிக்கினார்

பதுளை மாவட்டத்துக்குட்பட்ட பண்டாரவளை நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பாடசாலை மாணவிகளின் தலைமுடியை (கொண்டை) வெட்டும் மர்ம நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊவ-பரணகம பகுதியைச் சேர்ந்த 33 வயதான சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்டாரவளை பகுதியில் கடந்த சில நாட்களாக மாணவிகளின் தலைமுடி வெட்டப்பட்டுள்ளது. சனகூட்டம் அதிகமாக காணப்படும் பஸ்களுக்கு ஏறும் குறித்த நபர், மிகவும் சூட்சுமமான முறையில் தலைமுடியை (கொண்டையை) வெட்டிவந்துள்ளார்.

இதனால் மாணவிகள் மத்தியில் பெரும் அச்சம் நிலவியது. இது தொடர்பில் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பண்டாரவளையிலிருந்து ஹீல்ஓய வரை பயணித்த பஸ் ஒன்றில் இருந்த மாணவி ஒருவரின் தலை முடியை வெட்ட குறித்த சந்தேகநபர் முயற்சித்துள்ளார்.

இதையடுத்து, பஸ்ஸில் பயணித்தவர்கள், குறித்த சந்தேகநபரை பிடித்து, பண்டாரவளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேகநபர் வசமிருந்த பயணப் பையிலிருந்து, பாடசாலை மாணவிகளுடையது என சந்தேகிக்கப்படும் கொண்டைகள், கத்தரிக்கோள் உள்ளிட்ட சில பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Related posts

Leave a Comment