புனரமைக்கப்பட்டு வரும் ஆலயங்களுக்கு நிதி ஒதுக்கீடு!-செந்தில் தொண்டமான் நடவடிக்கை-
பதுளை, ஹாலிஎல, பசறை,மடூல்சீமை மற்றும் லுனுகல ஆகிய இடங்களில் புனரமைக்கப்பட்டு வரும் ஆலயங்களுக்கு, ஆலய நிர்வாக குழுவினரிடம் புனரமைப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான நிதி ஒதுக்கீட்டினை இ.தொ.காவின் உப தலைவரும்,பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் வழங்கி வைத்தார்.மேலும் கட்டுமானப் பணியை விரைவுபடுத்த கோவில் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது .எதிர்வரும் காலங்களில் கட்டுமானப் பணிகளுக்காக மேலதிக நிதி வழங்குவதாக இக்கலந்துரையாடலின் போது செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.