பெருந்தொகை கழிவு தேயிலையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது…
தவுலகல காவல்துறை பிரிவிற்குட்பட்ட முரதகஹமுல பிரதேசத்தில் காவல்துறை விசேட அதிரப்படை வீரர்கள் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 5189 கிலோகிராம் கழிவு தேயிலையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முரதகஹமுல பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தவுலகல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.