Latest | சமீபத்தியது உள்நாடு 

அமைச்சரவை முடிவுகள் இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான களனி, முதுன் எலயில் அமைந்துள்ள காணித்துண்டொன்றை மின்சார உப நிலையமொன்றை அமைப்பதற்காக இலங்கை மின்சார சபைக்கு ஒப்படைத்தல்…..

களனி பேலியகொடை பிரதேசத்தில் மின்மாற்றித் தொகுதியை வலுப்படுத்துவதற்காக புதிய உப மின்நிலையமொன்றை அமைப்பதற்காக களனிப் பிரதேசத்தில் காணித்துண்டொன்றை வழங்குமாறு மின்சார சபை மற்றும் இலங்கை மின்சார தனியார் கம்பனி நகர அபிவிருத்தி அதிகாரசபையிடம் கோரியுள்ளன.

அதற்கமைய, இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தால் முதுன் எல அபிவிருத்திக் கருத்திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்டுள்ள காணியில் 02 ரூட் 26.5 பேர்ச்சர்ஸ் காணித்துண்டொன்றை அரச பிரதான விலைமதிப்பீட்டாளரின் விலைமதிப்பின் பிரகாரம் நீண்டகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் மின்சார சபைக்கு ஒப்படைப்பதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts

Leave a Comment