உள்நாடு 

அமைச்சரவை முடிவுகள் (18.01.2022) – இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் அமைந்துள்ள காணியின் சட்டபூர்வமான உரித்தை கூட்டுத்தாபனத்திற்கு வழங்கல்….

கொழும்பு 07, டொரின்டன் சதுக்கத்தில் அமைந்துள்ள 3.37 ஹெக்ரெயார் காணியில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் இயங்கி வருவதுடன், குறித்த காணிக்கான சட்டபூர்வமான உரிமை கூட்டுத்தாபனத்திற்கு இதுவரை வழங்கப்படவில்லை. குறித்த காணியை கூட்டுத்தாபனத்திற்கு ஒப்படைப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் உடன்பாடு தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, குறித்த காணியை விடுவிப்பு வழங்கல் பத்திரத்தின் மூலம் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு ஒப்படைப்பதற்காக வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts

Leave a Comment