உள்நாடு 

அமைச்சரவை முடிவுகள் (18.01.2022) – உருகுணை பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தின் நோர்த்தம்ப்ரியா பல்கலைக்கழகத்திற்கும் ( The Northumbria University, England ) இடையிலான கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்…

உருகுணை பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தின் நோர்த்தம்ப்ரியா பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

நிபுணத்துவக் கருத்துப் பரிமாற்றல், தெரிவு செய்யப்பட்ட பாடவிதானங்கள் தொடர்பான ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் உருகுணை பல்கலைக்கழகத்தில் தகைமை பெற்ற மாணவர்களுக்கு நோர்த்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சி திட்டங்களுக்கான முற்கூட்டிய அனுமதிகளை வழங்கல் போன்ற துறைகள் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts

Leave a Comment