Latest | சமீபத்தியது Sport | விளையாட்டு 

இலங்கை அணி 184 ஓட்டங்களால் அபார வெற்றி, தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது….

இலங்கை மற்றும் சுற்றுலா சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 254 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது. இலங்கை அணி சார்ப்பில் பெத்தும் நிஸ்ஸங்க 55 ஓட்டங்களையும், சரித் அசலங்க 52 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர். அதனடிப்படையில் சிம்பாப்வே அணிக்கு 255 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு துட்டுப்படுத்தாடிய சிம்பாப்வே அணி 25 வது ஓவரில் 70 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. சிம்பாப்வே அணி சார்ப்பில் தகுத்ஸ்வனாஷே கைதானோஅதிகபட்சமாக 19 ஓட்டங்களை பெற்றார். பந்து வீசி இலங்கை அணி சார்பில் ஜெஃப்ரி வாண்டர்சே 4 விக்கெட்களையும், துஷ்மந்த சமீர, ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தல இரண்டு விக்கெட்களையும் மேலும் மகேஷ் தீக்ஷனா, சாமிக்க கருணாரத்ன ஆகியோர் தல ஒரு விக்கெட் விதம் வீழ்த்தினார்.

இதனடிப்படையில் இலங்கை அணி மூன்றாவது போட்டியில் 184 ஓட்டங்களால் வெற்றி பெற்று, தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றிகொண்டது. ஆட்டநாயகன் விருதை சரித் அசலங்கயும், தொடரின் நாயகன் விருதை பாத்தும் நிஸ்ஸங்கவும் பெற்றனர்.

Related posts

Leave a Comment