Latest | சமீபத்தியது சினிமா 

கணவர் பற்றி ஏன் பிக் பாஸில் பேசவில்லை? குவிந்த கேள்விகளுக்கு பிரியங்காவின் பதில்!

லைவிலும் ரசிகர்கள் விடாமல் பிரியங்காவிடம் கணவர் பிரவீன் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பிரியங்கா ஒரு விஷயத்தை கூறியுள்ளார்.பிக் பாஸ் போட்டியாளர் பிரியங்காவிடம் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்த கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. அவரின் திருமண வாழ்க்கை, கணவர் பிரவீன் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வந்த கேள்விக்கு பிரியங்கா பதில் கூறியுள்ளார்.விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. டைட்டில் வின்னராக ராஜூ ஜெயமோகன் அறிவிக்கப்பட்டார். விஜய் டிவியின் ஆங்கர் பிரியங்கா இரண்டாவது இடம் பிடித்தார். இந்த நிகழ்ச்சியில் அதிகமான ரசிகர்கள் பெற்றதும் பிரியங்கா தான், நிறைய நெகடிவ் விமர்சனங்களை பெற்றதும் பிரியங்கா தான். பிக் பாஸில் இவர் அடித்த லூட்டிகள் அதிக பேரால் ரசிக்கப்பட்டாலும் நரியங்கா, சகுனி, என பிரியங்காவை வறுத்தெடுத்த ரசிகர்களும் உண்டு. அதற்கு காரணம், பிக் பாஸ் வீட்டில் பிரியங்கா வெளிப்படுத்திய எமோஷன்கள் தான். தாமரையுடன் சண்டை போட்டு விட்டு, அடுத்த சில மணி நேரங்களில் முத்தம் கொடுத்து சேர்ந்து கொள்வது, நிரூப், அபிஷேக் ஃபிரண்ட்ஷிப் என பிரியங்காவின் சில குணங்கள் ரசிகர்களுக்கு கோபத்தை வர வைத்தன. ஆனால் இதை எல்லாம் கடந்து தற்போது பிக் பாஸ் 5ல் இரண்டாம் இடத்தை பிடித்து மக்களுக்கு பிடித்த மன கவர்ந்த போட்டியாளர் என்ற பெயரையும் பிரியங்கா பெற்று விட்டார்.

பிரியங்கா பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது, ரசிகர்களால் அதிகம் எழுப்பட்ட கேள்வி இதுதான். அவரின் கணவர் பிரவீன் எங்கே? ஏன் பிக் பாஸ் ஷோவில் பிரியங்கா பிரவீன் பற்றி ஒரு இடத்தில் கூட பேசவில்லை? ஃபிரீஸ் டாஸ்கில் பிரியங்கா அம்மா, தம்பியுடன் ஏன் பிரவீன் வரவில்லை? என ஏகப்பட்ட கேள்விகள் உலா வந்தன.

அதுமட்டுமில்லை பிரியங்காவுக்கு பிரவீனுடன் விவாகரத்து ஆகி விட்டதாகவும் வதந்திகள் பரவின. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து ஒருசில நாட்கள் ரெஸ்ட் எடுத்த பின்பு பிரியங்கா யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் லைவ் வந்தார். இந்த லைவிலும் ரசிகர்கள் விடாமல் பிரியங்காவிடம் கணவர் பிரவீன் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பிரியங்கா ஒரு விஷயத்தை கூறியுள்ளார். அதாவது, ”பர்சனல் கேள்விகள் நிறைய கேட்கப்படுகிறது, அதிலும் குறிப்பாக பிரவீன் குறித்து நிறைய பேர் கேட்கிறீர்கள். உங்களின் ஆர்வம் புரிகிறது. இதற்கு கண்டிப்பாக ஒருநாள் விளக்கம் தருகிறேன். இதற்கான பதிலை மீண்டும் இதே போல் ஒரு லைவில் வந்து பேசுகிறேன். இப்போதைக்கு இந்த பர்சனல் கேள்வி குறித்து பேச வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.பிரியங்காவின் இந்த பதில் ரசிகர்களுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிற்து. வழக்கம் போல் சில தகவல்களும் இணையத்தில் பரவி வருகின்றன.

Related posts

Leave a Comment