Latest | சமீபத்தியது Politics | அரசியல் உள்நாடு 

பிரதமரின் புதிய செயலாளர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்….

பிரதமரின் புதிய செயலாளர் டீ.எம்.அனுர திசாநாயக்க நேற்று (20) கொழும்பு 07 சேர் ஏர்னஸ்ட் டி சில்வா மாவத்தை, இலக்கம் 58 இல் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து கடமைகளைப் பொறுப்பேற்றார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்து நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் பிரதமரின் புதிய செயலாளராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன்போது மஹாசங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து பிரதமரின் புதிய செயலாளர் டீ.எம்.அனுர திசாநாயக்க அவர்களை ஆசீர்வதித்தனர். இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான அனுர திசாநாயக்க இதற்கு முன்னர் நீர்ப்பாசனம், உயர் கல்வி தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல், கல்வி உட்பட பல அமைச்சுக்களின் செயலாளர் பதவிகளை வகித்துள்ளார்.

ஜனாதிபதியின் மேலதிக செயலாளராகவும் கடமையாற்றியுள்ள அனுர திசாநாயக்க அனுபவமிக்க அரச அதிகாரியாவார்.

Related posts

Leave a Comment