வலி.மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
வலி. மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இன்றைய தினம் (21) டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது வலி. மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் சிரமதானம் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
டெங்கு நுளம்பு பரவக்கூடிய பொருட்கள் பிரதேச சபையினரால் அகற்றப்பட்டது, வீதியோரங்களில் முளைத்திருக்கும் பாதீனியம் என்பன வெட்டப்பட்டது.
டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு இந்த டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கத்தின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபை ஊழியர்கள், லயன்ஸ் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.