Latest | சமீபத்தியது 

ஷானி அபேசேகர மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல்

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு தமக்கு எதிராக முன்வைத்த பரிந்துரைகளை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன, ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள், அவன்கார்ட் நிறுவனம், அந்த நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க யாப்பா சேனாதிபதி மற்றும் அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஜானக பண்டார உள்ளிட்டோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். .அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு 2020 ஜூன் 16 ஆம் திகதி தனக்கு அழைப்பு கிடைத்ததாக மனுதாரர் ஷானி அபேசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment