உள்நாடு 

Port city அண்டியுள்ள வலயத்தில் கழிவுபொருட்களை கொட்டுபவர்களுக்கு எச்சரிக்கை…..

கொழும்பு Port city நகரத்தை பார்வையிடுவதற்காக வரும் நபர்கள் ,இதனை அடுத்துள்ள சமுத்திர வலயத்தில் கழிவுப்பொருட்களை வீசினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக கொழும்பு துறைமுக நகரத்தை பார்வையிட செல்லும் போது அல்லது ஏனைய சந்தர்ப்பங்களில் சமுத்திர சுற்றாடலில் கழிவு பொருட்களை போடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி தர்சனி லஹாந்தபுர தெரிவித்துள்ளார்.

இதேவேளை சமுத்திர வலயத்தில் கழிவு பொருட்கள் போடப்படுவதை தடுப்பது தொடர்பில் Port city நிறுவனத்துடன் ஒன்றிணைந்து பொதுமக்களை தெளிவுப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு தாம் எதிர்பார்த்திருப்பதாகவும் சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி கூறினார்.

Related posts

Leave a Comment