World | உலகம் 

காதலியின் தாய்க்கு கிட்னி தானம் செய்த இளைஞர்: வேறுநபருடன் திருமணம் செய்த காதலி!

காதலியின் தாய்க்கு இளைஞரொருவர் கிட்னி தானம் செய்த போதிலும் தன்னை காதலி ஏமாற்றிவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக புலம்பிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக உயிருக்குயிராக பெண் ஒருவரை காதலித்து வந்தார். டிக் டாக் மூலம் முதலில் பழக்கம் ஏற்பட்டு அதன் பின் நட்புடன் பழகி பின்னர் காதலிக்க தொடங்கியுள்ளனர். இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென காதலியின் தாயாருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது.இதனை அடுத்து தனது வருங்கால மாமியாருக்கு தனது சிறுநீரகத்தை தானமாக கொடுத்துள்ளார் அந்த இளைஞர். இந்த நிலையில் தனது அம்மாவுக்காக சிறுநீரகத்தை தானமாக கொடுத்தார் என்று நன்றி கூட இல்லாமல் அந்தப் பெண் திடீரென வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டுவிட்டார்.இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ஆசிரியர் டிக்டாக்கில் வீடியோவை வெளியிட்டு புலம்பியுள்ளார். அந்த வீடியோவில் நான் கனவிலும் இவ்வாறு நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், தனது காதலியின் அம்மாவுக்காக கிட்னியை கொடுத்தும், அவர் என்னை ஏமாற்றி விட்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த வீடியோவை பல லட்சம் பேர் பார்த்து உள்ளதை அடுத்து அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு இளைஞன் தனது காதலிக்காக இதை விட வேறு என்ன தியாகம் செய்ய முடியும் என்றும், ஆனால் அப்படிப்பட்ட இளைஞரை விட்டுவிட்டு அந்த பெண் வேறு ஒருவனை திருமணம் செய்ய எப்படி அவருக்கு மனது வந்தது என்றும் நெட்டிசன்கள் அந்த பெண்ணை கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related posts

Leave a Comment