Latest | சமீபத்தியது உள்நாடு 

(க.பொ.த ) சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் திகதி நீடிப்பு…

கடந்த ஆண்டு கூறிய (க.பொ.த) சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் திகதி விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார் அதன்படி விண்ணப்பங்களுக்கு திகதி இம்மாதம் 20ஆம் தேதி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் மூன்றாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.doesnt.lk) அல்லது (https://wwww.onlineexams.gov.lk/eic) அல்லது திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கைபேசி செயலி (Mobile App ‘Exams’) ஊடாக விண்ணப்பங்களை இணையத்தில் சமர்ப்பிக்க முடியும்.

அரச பாடசாலை மாணவர்கள் சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் தலைமையாசிரியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் பூர்த்தி செய்யப்பட்ட உடன் அதன் நகலைப் பெற்று தேவைப்படும்போது சமர்ப்பிப்பதற்காக விண்ணப்பதாரர்களின் பாதுகாப்பின் கவனமாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment