ஜனாதிபதியின் பதவி காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிக்கவேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே
கொவிட் தொற்று காரணமாக ஜனாதிபதியின் பதவி காலத்தில் இல்லாமல் போன இரண்டு ஆண்டு காலத்தை நாடாளுமன்றத்தில் இருக்கும் பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி பெற்றுக்கொடுக்கும் யோசனையை கொண்டுவர வேண்டும் என நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், நாடாளுமன்றத்தின் பதவி காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் யோசனையும் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.