உள்நாடு 

தனியார் பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி….

புத்தளம் – திருகோணமலை பிரதான வீதியின் நொச்சியாகம நகரில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் 45 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற போது, கலாஓயாவை நோக்கி பயணம் செய்த தனியார் பஸ் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக நொச்சியாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். எனினும், குறித்த மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணம் செய்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அத்துடன், மோட்டார் சைக்கிளை செலித்திச் சென்ற நபர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் கூறினர். விபத்துடன் தொடர்புடைய தனியார் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். நொச்சியாகம பொலிஸார் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

Leave a Comment