Latest | சமீபத்தியது உள்நாடு 

நாடாளுமன்ற உறுப்பினர்களான நாலக்க கோட்டேகொடவா மற்றும் துஷ்மந்த மைத்திரிபாலவுக்கும் கோவிட் தொற்று உறுதி….

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மைத்திரிபாலவுக்கு கோவிட் தொற்று உறுதியாகி உள்ளது. அவருக்கு நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாலக்க கோட்டேகொடவாவுக்கும் கோவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

Leave a Comment