Entertainment | பொழுதுபோக்கு, World | உலகம் 

உலகின் வயதான மனிதராக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தவர் உயிரிழப்பு……

உலகிலேயே அதிக வயதுடைய மனிதராக அறியப்பட்டவர் தனது 112 வயதில் காலமானார். உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சாடர்னினோ டிலா ப்யூன்டே தனது 112 ஆவது வயதில் காலமாகியுள்ளார். இவர் இறக்கும்போது இவருடைய வயது 112 வருடங்கள் 341 நாட்களாகும்.

ஸ்பெயின் நாட்டின் வடமேற்கில் உள்ள லியோன் நகரைச் சேர்ந்தவர் சாடர்னினோ டிலா ப்யூன்டே இவரை உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் சாதனைப் புத்தகம் கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தது.

பெப்ரவரி 11, 1909 இல் லியோனின் புவென்டே காஸ்ட்ரோவின் சுற்றுப்புறத்தில் பிறந்த சடர்னினோ – ‘எல் பெபினோ’ என்றும் அழைக்கப்படுகின்றார். இவர் 1933 இல் அன்டோனினா பேரியோ குட்டரெஸை திருமணம் செய்தார்.

எதிர்வரும் மாதம் தனது 113 வது பிறந்தநாளைக் கொண்டாட இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment