Politics | அரசியல் 

ஜீவனுக்கு சிவநேசன் விடுக்கும் பகிரங்க சவால்!

முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் வழங்கிய காணி உறுதிபத்திரம் சட்டரீதியானதாக ( original) இருந்தால் பதவியில் இருந்து விலக தயாரா? என தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா.சிவநேசன் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் சவால் விடுத்துள்ளார்.

இந்த உறுதிபத்திரத்தின் அனைத்து பிரதிகளையும் வெளியிட்டுள்ளேன். தேவைபடின் உங்கள் அமைச்சுக்கு அஞ்சல் மூலமாகவும் அனுப்பி வைக்கின்றேன். உங்கள் சட்ட ஆலோசகர்களை வைத்து பரிசோதனை செய்யவும்.

காலம் காலமாக இவ்வாரான பொய்களை மக்களிடம் சொல்லி ஆட்சி பீடம் ஏறும் உங்களுக்கு இது தக்க சவால். இந்த பத்திரம் சட்டரீதியானதாக இருந்தால் நீங்கள் பாராளுமன்ற பதவியில் இருந்து விலக வேண்டும். போலியாக இருந்தால் உங்கள் சவாலை தொழிலாளர் தேசிய சங்கம் ஏற்க தயார் எனவும் கூறியுள்ளார்.

Related posts

Leave a Comment