Latest | சமீபத்தியது உள்நாடு 

நாளை (24) முதல் மீண்டும் மின்வெட்டு அமுல்….

நாளை (24) ஒரு மணி நேரமும் நாளை மறுதினம் (25) முதல் சுமார் இரண்டு மணி நேரமும் மின் துண்டிப்பு மேற்கொள்ள வேண்டிய ஏற்படும் என மின்சார சபை பொருளியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் 4 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிப்பு ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நாளை முதல் ஒரு மணி நேரமும், நாளை மறுதினம் 2 மணிநேரமும் மின்வெட்டு அமல் படுத்தப்பட வேண்டியுள்ளது. ஆனால் நாளை ஒரு மணி நேர மின்வெட்டு 2 மணி நேரமாக நீட்டிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அதன்படி நாளையும் 2 மணி நேரம் மின்வெட்டு ஏற்படலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

எனினும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே இந்த செயன்முறை தொடர முடியும் என அவர் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் இலங்கை மின்சார சபை நிச்சயமாக 4 மணி நேர மின்வெட்டை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

Leave a Comment