மட்டக்களப்பில் கோர விபத்து – தந்தை தலைநசுங்கி பலி, மகன் படுகாயம்
மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதியில் கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்திற்கு முன்னால் நேற்று சனிக்கிழமை (22) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில், தந்தை தலை நசுங்கி உயிரிழந்ததுடன் மகன் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பிரதான வீதியில் ஆரையம்பதி பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி தந்தையும் மகனும் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் மீது பிக்கப் வாகனம் மோதிவிட்டு தப்பியோடியுள்ளது. பிக்கப் மோதிய வேகத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த கனரக நெல் அறுவடை செய்யும் இயந்தரத்தினுள் மோட்டார் சைக்கிள் சிக்கி தந்தை நசுங்குண்டு ஸ்தலத்திலேயே பலியானார்.
இதையடுத்து படுகாயமடைந்த மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.