மலையகம் 

மலைநாட்டில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக தாழ்ந்து வருகின்றன!

  • மின் உற்பத்திக்கும் பாதிப்பு –

(

மத்திய மலை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையினை தொடர்ந்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மிக வேகமாக தாழ்ந்து வருகின்றன.

காசல்ரி,மவுசாகலை,கெனியோன் லக்ஸபான,நவலக்ஸபான விமல சுரேந்திர உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைந்துள்ளன.

தேசிய மின் உற்பத்திக்கு பாரிய அளவில் பங்களிப்பு செய்யும் காசல் ரி நீர்த்தேககத்தின் நீர் மட்டம் என்றுமில்லாதவாறு தாழ்ந்துள்ளது.தற்போது சுமார் 15 அடிவரை தாழ்ந்துள்ளதாக மின்சாரதுறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நீர்த்தேக்கத்தின் நீர்;மட்டம் தாழ்ந்து காணப்படுவதனால் நீரில் மூழ்கிகிடந்த கட்டடங்கள் தென்பட ஆரம்பித்துள்ளன.

நீர் ஓடைகள்,அருவிகளின் நீர் வற்றிக்காணப்படுவதiனால் சிறிய நீர் மின் உற்பத்தி நிலையங்களின் மின் உற்பத்தியும் பாரிய அளவில் குறைவடைந்துள்ளன.

Related posts

Leave a Comment