உள்நாடு 

10 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளுடன் பெண் கைது…..

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க வரி செலுத்தாமல் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளுடன் பெண் ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் கைது செய்துள்ளனர். கண்டி பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய வர்த்தக பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம் இருந்து 599 கிராம் 404 மில்லிகிராம் எடையுள்ள 6 தங்க மோதிரங்களும் 200 கிராம் 44 மில்லிகிராம் எடையுள்ள தங்க மாலை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட பெண் மற்றும் நகைகள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தினரால் விமான நிலைய சுங்க விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment