Latest | சமீபத்தியது 

“THE CONFLICT THAT ELUDED PEACE” நூலின் முதல் பிரதி ஜனாதிபதியிடம் கையளிப்பு…

முன்னாள் இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல் ஷாந்த கோட்டேகொட அவர்களால் எழுதப்பட்ட “THE CONFLICT THAT ELUDED PEACE” நூலின் முதல் பிரதி, இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. ஷாந்த கோட்டேகொட அவர்களின் 36 வருடகால இராணுவச் சேவையில் பெற்ற அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இராணுவத்தின் காலாட்படைப் பிரிவின் மேஜர் தரநிலை முதல் இராணுவத் தளபதியாகப் பதவிநிலை வகித்து ஓய்வுபெற்றது வரை போர்க்களத்தில் கிடைத்த வெற்றிகள் மற்றும் பின்னடைவுகளின் ஒப்பீட்டு ஆராய்வை இதன் மூலம் முன்வைப்பதாக கோட்டேகொட அவர்கள் இதன்போது தெரிவித்தார்.

Read More
Latest | சமீபத்தியது World | உலகம் 

விசா விவகாரம்! – அவுஸ்திரேலியாவில் இலங்கை குடும்பத்திற்கு கிடைத்த வெற்றி

பிரியா, அவரது கணவர் நடேஸ் மற்றும் மூத்த மகள் கோபிகா ஆகியோர் தமது bridging விசாவை புதுப்பிக்கமுடியாதவகையில் குடிவரவு அமைச்சர் மேற்கொண்டிருந்த நடவடிக்கையில், procedural fairness- பரிசீலனை சார்ந்த நியாயத்தன்மை பேணப்படவில்லை என Federal Circuit நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிரியா குடும்பத்தினரின் bridging விசா விண்ணப்ப விவகாரத்தில் குடிவரவு அமைச்சர் Alex Hawke குடிவரவுச் சட்டத்திலுள்ள “lower the bar” என்ற அம்சத்தை முன்மொழிந்திருப்பதாக கடந்த ஆண்டு ஜுன் மாதம் இக்குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து, பிரியா, நடேஸ் மற்றும் கோபிகா ஆகிய மூவருக்கும் 12 மாதங்களுக்கான bridging விசா வழங்கப்பட்டது. ஆனால் இரண்டாவது மகள் தருணிகா இதில் உட்படுத்தப்படவில்லை. குடிவரவு அமைச்சரால் முன்மொழியப்பட்ட “lower the bar” அடிப்படையில் பிரியா, நடேஸ் மற்றும் கோபிகா ஆகியோர் bridging விசாவிற்கு மீளவும் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு நீக்கப்பட்டது. தருணிகா ஏற்கனவே தாக்கல்செய்திருந்த…

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

பொதுமன்னிப்பு கோரிக்கைக்கு மத்தியில், ரஞ்சன் மீதான இரண்டாவது “நீதிமன்ற அவமதிப்பு” விசாரணை!

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை உயர்நீதிமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது. ராமநாயக்கவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அஷான் பெர்னாண்டோ, அவரது சிரேஷ்ட சட்டத்தரணி அனுர மெத்தேகொட உடல்நலக்குறைவு காரணமாக நீதிமன்றில் முன்னிலையாக முடியாதுள்ளதாக நீதிமன்றில் அறிவித்தார் இதனையடுத்தே விசாரணை, மார்ச் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதன்போது கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தற்போது ஸூம் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பைப் படித்து வருவதாகவும் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நீதிமன்றத்தை அவமதித்த முதல் குற்றத்துக்காக 2021, ஜனவரி 11அன்று ரஞ்சன் ராமநாயக்கவை குற்றவாளி என தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், அவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தது.…

Read More
World | உலகம் 

அமொிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு! பலர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் இடம்பெற்ற இரவு விருந்து நிகழ்ச்சியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். கலிபோர்னியா மாகாணம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு வீடு ஒன்றில் இடம்பெற்ற விருந்தின்போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருந்து நடைபெற்ற வீட்டில் அதிகாலை 1 மணியளவில் திடீரென துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், விருந்து நடைபெற்ற வீட்டில் 2 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 4 பேரின் உடலங்களை மீட்டனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். சம்பவத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. 

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

தனியார் வங்கிகளிடம் இருந்து டொலர்களை அரசுக்கு பெறும் யோசனை

இலங்கையில் உள்ள தனியார் வங்கிகளுக்கு கிடைக்கும் வெளிநாட்டு நாணயங்களில் மூன்றில் ஒரு பங்கை இலங்கை மத்திய வங்கி ((Cenral Bank of Srilanka)) பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில(Udaya Gammanpila)அரசுக்கு பெற்றுக்கொள்ளும் இந்த யோசனையை முன்வைத்துள்ளார். மருந்து, மருத்துவ உபகரணங்கள், எரிபொருள் உட்பட அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்ய இந்த பணத்தை இலங்கை மத்திய வங்கிக்கு வழங்குமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் நிலவும் அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக அத்தியசிய உணவு, மருந்து, எரிபொருள் போன்றவற்றை இறக்குமதி செய்வதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கை அரசாங்கம் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து கைமாற்று உடன்படிக்கை மூலம் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது…..

இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். துறைமுகத்தில் உள்ள இரண்டு எரிபொருள் கப்பல்களில் இருந்து மின்சார சபைக்குத் தேவையான எரிபொருட்களை வழங்க தீர்மானித்துள்ளதனால் இன்று மின்வெட்டு அமுலாகாது என தெரிவிக்கப்படுகிறது.

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

மின் துண்டிப்பு செய்யாதிருக்க தீர்மானம்! ஜனாதிபதி அதிரடி முடிவு

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து மின் துண்டிப்பு மேற்கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின் சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை அடுத்து இன்று முதல் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்திருந்து. இதன்படி, அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த இலங்கை மின்சார சபை, A பிரிவு : 17:30 முதல் 18:30 வரை, B பிரிவு: 18:30 முதல் 19:30 வரை, C பிரிவு : 19:30 முதல் 20:30 வரை, D பிரிவு: 20:30 முதல் 21:30 வரை என்ற அடிப்படையில் மின் துண்டிப்பு செய்யப்படும் என அறிவித்திருந்தது.இந்நிலையிலேயே, ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து மின் துண்டிப்பு மேற்கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின் சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

நான்கு கட்டங்களாக மின்வெட்டு! சற்றுமுன்னர் நேர அட்டவணையை வெளியிட்டது இலங்கை மின்சார சபை

சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக பின்வரும் நேர அட்டவணைக்கு அமைவாக மின்துண்டிப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை மின்சார சபை இதனை அறிவித்துள்ளது. மின்தடை இடம்பெறும் நேரங்கள் A பிரிவு : 17:30 முதல் 18:30 வரை B பிரிவு: 18:30 முதல் 19:30 வரை C பிரிவு : 19:30 முதல் 20:30 வரை D பிரிவு: 20:30 முதல் 21:30 வரை   முதலாம் இணைப்பு   இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளின் காரணமாக இன்று (24) இரவு மற்றும் நாளை (25) இரவு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது. அந்த வகையில், நான்கு பிரிவுகளின் கீழ் இன்று மாலை 05.45 மணி முதல் இரவு 09.30 மணி வரை…

Read More
உள்நாடு 

நீர்கொழும்பில் அடையாளம் தெரியாத இரு சடலங்கள் மீட்பு….

நீர்கொழும்பு குடபடுவ பிரதேசத்திலும், நீதிமன்ற வீதியிலும், இனந்தெரியாத இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குடபடுவ பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் 65 வயதுடைய நபருடையது என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நபர் 4 அடி மற்றும் 6 அங்குல உயரம் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, நீர்கொழும்பு நீதிமன்ற வீதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் 75 வயதுடைய ஆண் என தெரிவிக்கப்படுகிறது. அந்த நபர் 4 அடி மற்றும் 5 அங்குல உயரம் கொண்டவர் என நம்பப்படுவதாகவும், கடைசியாக வெள்ளை நிற சாரம் மற்றும் வெள்ளை நீண்ட கை சட்டை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவ்விரு சம்பவங்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More
உள்நாடு 

ஆசனங்களில் அமராத பயணிகளுக்கான புதிய கட்டண முறை – இராஜாங்க அமைச்சர் அமுனுகம

பஸ்களில் அமர்ந்து பயணிக்கும் பயணிகளுக்கு கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய திட்டம் பெரும்பாலும் இந்த வாரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என பஸ் போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச்செல்லும் விதி பல பஸ்களில் மீறப்படுவதாக கூறினார். இந்த விதிமீறல்கள் தொடர்பில் கடந்த வாரம் பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அமுனுகம, தடையை மீறும் பஸ் நடத்துனர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் எனினும், கைது செய்யப்பட்டாலும், கிராமப்புறங்களில் அத்துமீறல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார். இந்த நடவடிக்கை நிறுத்தப்படாவிட்டால் இந்த வாரத்தில், ஆசனங்களில் அமராத பயணிகளுக்கான பஸ் கட்டணத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம்…

Read More