மலையகம் 

இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நுவரெலியாவில் விசேட நிகழ்வு!

இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கண்டி இந்திய உதவி தூதுவராலயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகள் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியாவில் நடைபெற்றன. இதனை முன்னிட்டு திரைப்பட திருவிழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வு நுவரெலியா மாநகர பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்றது.இதன்போது நுவரெலியாவில் அமைந்துள்ள சிறுவர் இல்லங்களை சேர்ந்த சிறுவர்கள் பாடசாலைமாணவர்கள் மற்றும் பெரியோர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழ் திரைப்படம் ஒன்று ஒலிபரப்பு செய்யப்பட்டது.நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் மற்றும் நுவரெலியா மாநகர பிரதி முதல்வர் யதர்சனா புத்திரசிகாமணி கண்டி இந்திய உதவி தூதுவரலாயத்தின் இரண்டாம் நிலை செயலாளர் சி.ஆர்.கிருஸ்ணபிரசாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது இதற்கான அனுசரணையை நுவரெலியா வர்த்தகர் நிறைக்குமார் வழங்கியிருந்தார்.

Related posts

Leave a Comment