உள்நாடு 

இலங்கையர்களுக்கு வீடு வழங்கும் புதிய திட்டம் – உதவித் தொகை அதிகரிப்பு

இலங்கையில் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீடுகளில் வசிப்போருக்கு குறைந்த விலையில் வீடு வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டத்தின் பயனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை 6,50,000 ரூபாயாக அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தற்காலிக வீடுகளில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 600,000 ரூபாய் உதவி வழங்க தீர்மானிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், நிர்மாணப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த உதவித்தொகையை 50,000 ரூபாவால் அதிகரிக்குமாறு வீடமைப்பு அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவைக்கு யோசனை முன்வைத்துள்ளார்.

தெரிவு செய்யப்பட்ட பயனாளி குடும்பங்களுக்கு இந்த வருடம் முதல் தலா 650,000 ரூபாவை வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

Related posts

Leave a Comment