Latest | சமீபத்தியது உள்நாடு 

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுகாதார அமைச்சு

கொவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சகத்தின் கொவிட்-19 தலைமை ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி இது குறித்து கருத்து தெரிவித்தார்.

மூன்றாம் டோஸை கட்டாயமாக்குவதற்கு ஐரோப்பிய நாடுகளிலும் பல்வேறு வளர்ந்த நாடுகளிலும் இவ்வாறான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சுகாதார அமைச்சரிடமும் சட்டமா அதிபரிடமும் ஆலோசனையைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கையிலும் பாரிய வீழ்ச்சி காணப்படுகிறது. நேற்றுமுன் தினத்தில் (22) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,

கொவிசீல்ட் முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

சைனோபார்ம் முதலாவது டோஸ் – 70
சைனோபார்ம் இரண்டாவது டோஸ் – 200

ஸ்புட்னிக் V முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
ஸ்புட்னிக் V இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

ஃபைசர் முதலாவது டோஸ் – 338
ஃபைசர் இரண்டாவது டோஸ் – 80
ஃபைசர் மூன்றாவது டோஸ் – 7,299

மொடர்னா முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
மொடர்னா இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

Related posts

Leave a Comment