உள்நாடு 

நாட்டில் இன்று முதல் மீண்டும் மின் துண்டிப்பு அமுல்!

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கான யோசனையை முன்வைத்துள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைவாக இன்றைய தினம் ஒரு மணிநேரமும் நாளை முதல் சுமார் 2 மணிநேரமும் மின் துண்டிப்பை மேற்கொள்ள வேண்டியேற்படும் என அந்த சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரட்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பிரச்சினை மேலும் நீடித்து, மழைவீழ்ச்சியும் கிடைக்கப்பெறாவிட்டால் மார்ச் மாத இறுதியில் மின்சார விநியோகத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

Leave a Comment