Latest | சமீபத்தியது 

நாட்டு மக்களுக்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை முக்கிய அறிவிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் தற்போதைய வரட்சியான காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமானால் குடிநீருக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவுறுத்தியுள்ளது.

இதன் காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் நீரை பயன்படுத்துவதுடன், அதனை வீண் விரயமாக்குவதனை தவிர்க்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை மின்சார உற்பத்திக்கு தேவையான உச்சபட்ச அளவிலான நீரை வழங்க முடியாதுள்ளதாக நீர்ப்பாசன திணைக்கள தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மின் உற்பத்திக்கு நீர்ப்பாசன திணைக்களத்தினால் நீர் வழங்கப்படுமாயின் குடிநீர் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு எதிர்காலத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும் என அந்த சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும், மேலும் 3 மாதத்திற்கு விவசாயம் மற்றும் குடிநீருக்கு தேவையான நீர் இருப்பதாக நீர்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர் டீ.அபேசிறிவர்தன (D. Abosirivardhana) தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment