உள்நாடு 

மின்சார நெருக்கடிக்குக் காரணம் உரிய காலப்பகுதியில் அனல் மின் நிலையங்கள் அமைக்கப்படாமையே….

மின்சாரம் தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குக் காரணம் உரிய காலப்பகுதியில் அனல் மின் நிலையங்கள் அமைக்கப்படாமையே என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான திட்டம் பல வருடங்களுக்கு முன்னர் வகுக்கப்பட்டதாகும்.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒருபகுதி செயலிழந்தமை மின்னுற்பத்தி தொடர்பில் பிரச்சினை ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது என்று இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி எம்.என்.சுசந்த பெரேரா தெரிவித்தார்.

Related posts

Leave a Comment