Latest | சமீபத்தியது உள்நாடு 

மின் துண்டிப்பு செய்யாதிருக்க தீர்மானம்! ஜனாதிபதி அதிரடி முடிவு

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து மின் துண்டிப்பு மேற்கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின் சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை அடுத்து இன்று முதல் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்திருந்து.

இதன்படி, அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த இலங்கை மின்சார சபை, A பிரிவு : 17:30 முதல் 18:30 வரை, B பிரிவு: 18:30 முதல் 19:30 வரை, C பிரிவு : 19:30 முதல் 20:30 வரை, D பிரிவு: 20:30 முதல் 21:30 வரை என்ற அடிப்படையில் மின் துண்டிப்பு செய்யப்படும் என அறிவித்திருந்தது.இந்நிலையிலேயே, ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து மின் துண்டிப்பு மேற்கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின் சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment