சினிமா 

முதல் முறையாக தனது விவாகரத்து பற்றி கூறிய ‘செம்பருத்தி’ ஷபானா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா திருமணம் சில மாதங்களுக்கு நடந்து முடிந்தது. அந்த வகையில் தற்போது தன்னுடைய விவாகரத்து குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

விவாகரத்து பற்றிய கருத்து:

ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் செம்பருத்தி சீரியல், தமிழக மக்களின் விருப்பமான தொடராக உள்ளது. இதில் பார்வதியாக நடித்து வரும் நடிகை ஷபானா வுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவ்வாறு பிரபலமான நடிகை ஷபானா கடந்த நவம்பர் மாதம் 11 ஆம் தேதி ஆரியன் என்ற நடிகருடன் காதல் திருமணம் செய்து கொண்டார். அந்த வகையில் ஷபானா தனது திருமணத்தின் நாள் அன்றுதான், தன்னுடைய திருமண அறிவிப்பை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.சமீபத்தில் ரசிகர் ஒருவர் ஷாபனாவிடம் விவாகரத்து செய்தி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வாறு ரசிகர் கேட்ட கேள்விக்கு ஷபானா, சமூக வளையத்தில் வரும் போலியான செய்திகளை நம்பும் ரசிகர்களை பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல்” என்னை பொறுத்தவரை ஊடகங்கள் சரியான மற்றும் உண்மையான தகவலை மக்களுக்கு கொடுக்க வேண்டும் அதில் கண்ணியமும் கட்டுப்பாடும் இருக்க வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment