World | உலகம் உள்நாடு 

இலங்கை இதை செய்தே ஆகவேண்டும்: வைரமுத்து செய்த அதிரடி டுவிட்

இந்தியா இலங்கைக்கு கொடுத்த கடன் திருப்பி கொடுக்குதோ, இல்லையோ தமிழக மீனவர்களின் படகுகள் திரும்ப வேண்டும் என பிரபல பாடலாசிரியர் வைரமுத்து (Vairamuthu) கூறியுள்ளார்.

இந்திய எல்லைக்குள் அத்துமீறி இலங்கை கடற்படை நுழைந்து தமிழக மீனவர்கள் மீது தாக்குதவது, சுட்டுப் படுகொலை செய்வது, கைது செய்வது பல வருடங்களாக நீடித்து வருகிறது.இது தொடர்பாக, கடந்த சில வருடங்களாக தமிழக மீனவர்களின் படகுகளையும், இலங்கை அரசு பறிமுதல் செய்து வருகிறது.

இதேவேளை, கடந்த 7 வருடங்களாக இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் பராமரிப்பின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. குறித்த படகுகளையாவது மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் தமிழக மீனவர்களின் 105 படகுகளை இலங்கை அரசு ஏலம் விடப் போவதாக அறிவித்திருக்கிறது. தமிழக மீனவர்களின் படகுகள் பிப்ரவரி 7-ஆம் திகதி முதல் ஏலத்துக்கு விடப்பட உள்ளன.

Related posts

Leave a Comment