உந்துருளியும் லொறியும் மோதி விபத்து!
பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கமேவெல 4ம் கட்டை பகுதியில் உந்துருளியும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் உந்துருளி தீப்பற்றி எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது.
உந்துருளியில் பயணித்த நபர் காயங்களுக்கு உள்ளாகி பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
உந்துருளியில் பயணித்த நபர் பசறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஆவார் இவர் படல்கும்பரையில் இருந்து பசறை பொலிஸ் நிலையத்திற்கு கடமைக்கு சென்று கொண்டிருந்த வேளையில் கமேவெல 4ம் கட்டைப் பகுதியில் அம்மன் கோயில் அருகில் பசறை பகுதியில் இருந்து படல்கும்பரைக்கு வந்து கொண்டிருந்த லொறியொன்றில் மோதியே இவ்விபத்துக்குள்ளாகியுள்ளார் இச்சம்பவம் இன்று காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.