தோட்ட வைத்தியசாலைகளை பொறுப்பேற்கிறது அரசு – அமைச்சரவை அனுமதி!
பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள 450 சுகாதார நிலையங்களில் முதற்கட்டமாக 59 சுகாதார நிறுவனங்களை மாகாண சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சுகாதார அமைச்சர் கெஹலிய
ரம்புக்வெல்ல முன்வைத்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று நடைபெற்றது. இதன்போது அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்த தகவலை வெளியிட்டார்.
