உள்நாடு 

நிதியமைச்சரின் அறிவிப்பின் பின் வாழ்க்கை செலவு வேகமாக அதிகரிப்பு

அரச ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) அறிவித்து ஒரு மாதம் செல்லும் முன்னர் வாழ்க்கை செலவு பாரியளவில் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் இறுதியில் 12.1 வீதமாக அதிகரித்து காணப்பட்ட பண வீக்கமானது டிசம்பர் மாத இறுதியில் 14 வீதமாக மேலும் அதிகரித்தது. பணவீக்கத்தை அளவிடும் பொருட்கள், சேவை மற்றும் உணவுகளின் விலைகள் மிக வேகமாக அதிகரித்து வருவதே இங்கு முக்கியமானது.

கடந்த நவம்பர் மாத இறுதியில் உணவு வகை சம்பந்தமான பணவீக்கமானது 16.9 வீதமாக காணப்பட்டது. அது டிசம்பர் மாத இறுதியில் 21.5 வீதமாக வேகமாக அதிகரித்தமை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ தரவுகள் மூலம் வெளியிடப்பட்டது.

அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அறிவித்திருந்தார்.

இந்த கொடுப்பனவு அரசுக்கு சொந்தமான கூட்டுத்தாபனங்கள், சபைகள், அதிகார சபைகள் மற்றும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

Related posts

Leave a Comment