மலையகம் 

பதுளையில் தோட்ட தேயிலை மலையிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

பதுளை, வேவெஸ்ஸ பெருந்தோட்ட தெபத்தை தோட்டப் பிரிவிலிருந்து பெண் ஒருவரின் சடலமொன்றினை, பதுளைப் பொலிசார் மீட்டுள்ளனர்தெபத்தை தோட்டப் பிரிவைச் சேர்ந்த லெட்சுமணன் சந்திரலேகா என்ற 58 வயதுடைய பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பதுளைப் பொலிசார் தெரிவித்தனர்.பதுளை – பசறை பிரதான வீதியின் 6 ஆம் மைல் கல்லுக்கு அருகிலுள்ள தெபத்தை தேயிலை மலையிலேயே, குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.பெண்ணொருவரின் சடலம் தேயிலை மலையில் கிடப்பதாக, பதுளைப் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, பொலிசார் விரைந்து சடலத்தை மீட்டனர். இந்நிலையில், சடலம் தற்போது, பதுளை அரசினர் வைத்தியசாலையின் பிரேத அறையில் சட்ட வைத்திய பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்த பெண் பாலியல் வல்லுறவிற்குற்படுத்தப்பட்டு, கோரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பதாக பலத்த சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக, விசாரணைகளை மேற்கொண்டுள்ள பதுளைப் பொலிசார் தெரிவித்தனர்.மேலும், பொலிசார் பல்வேறு கோணங்களில், இந்த மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

Leave a Comment