உள்நாடு 

யாழில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் முறைகேடு! பரீட்சை ஆணையாளர் நாயகம் அதிரடி உத்தரவு

யாழ்.கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் சிலருடைய பெற்றோர் பரீட்சை ஆணையாளருக்கு எழுத்துமூல முறைப்பாடு அனுப்பியுள்ளனர்.

குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பகுதி 1 வினாத்தாளின் செய்கைவழித்தாளை பத்து நிமிடத்திற்கு முன்னரே பெற்றுக் கொண்டமை.

கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பென்சிலால் விடையளிக்க முடியும் என தெரிவித்திருந்தபோதும் பென்சிலால் மாணவர்கள் எழுதிய விடையை 15 நிமிடத்தின் பின் அழித்துவிட்டு பேனாவால் விடை எழுதுமாறு கூறியமை.

பரீட்சை மண்டபத்தில் மணிக்கூடு வைக்கப்படாமல் மற்றும் முன்னறிவித்தல் என்றே விடைத்தாளை பெற்றுக்கொண்டமை ஆகிய காரணங்களைக் குறிப்பிட்டு குறித்த பாடசாலையில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் 18பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே பாதிக்கப்பட்டதாக கருதப்படும் மாணவர்களுக்கு உரிய நிவாரணத்தைப் பெற்றுத் தருமாறு கோரி மாணவர்களின் கையெழுத்துடன் குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த முறைப்பாடு உள்ளிட்ட சகல முறைப்பாடுகள் தொடர்பாகவும் துரிதமான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும். என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டீ.தர்மசேனா ஊடகங்களுக்கு தொிவித்துள்ளார்.   

Related posts

Leave a Comment