Politics | அரசியல் 

வியாழேந்திரன் வீட்டிற்கு முன் இளைஞன் படுகொலை – விசாரணை செய்ய சுமந்திரன் நீதிமன்றில்

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டிற்கு முன்னாள் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட போது அமைச்சர் தனது வீட்டிலே இருந்தார் என்றும் அதற்கு பின்னர் தான் அவர் அங்கிருந்து வெளியேறி சென்றார் என்ற சாட்சியங்கள் சம்மந்தமாகவும் சம்பவம் தொடர்பாக அவருடைய தொலைபேசியிலிருந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தது தொடர்பாக விசாரிக்வேண்டும் என நகர்த்தல் பத்திரம் மூலம் இன்று திங்கட்கிழமை (24) நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.சுமந்திரன் தெரிவித்தார்.

கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி இராஜாங்க அமைச்சரின் வீட்டு வாசலில் படுகொலை செய்யப்பட்ட இளைஞன் மாகாலிங்கம் பாலசுந்தரம் தொடர்பான வழக்கு இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு எடுக்கொள்ளப்பட்டது.

Related posts

Leave a Comment