Latest | சமீபத்தியது Politics | அரசியல் உள்நாடு 

இரத்தினபுரி நகரில் 1000 மில்லியன் செலவில் 7 மாடி வர்த்தக கட்டிடம், அமைச்சர் பவித்ரா நாளை அடிக்கல் நாட்டுகிறார்….

1000 மில்லியன் ரூபா செலவில் இரத்தினபுரி நகரில் நவீன 7 மாடிக்கட்டத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் நாளை (27) நடப்படவுள்ளதாக இரத்தினபுரி மாநகர மேயர் டிரோன் அத்தனாயக்க நேற்றுத் தெரிவித்தார்.

நவீன கட்டிட வடிவமைப்புகளுடன் நிர்மாணிக்கப்படவுள்ள இக்கட்டிட த்தின் அமைப்பு பணிகளை இரண்டு வருடங்களுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இக்கட்டிடத்தின் இரண்டு மாடிகளில் சர்வதேச இரத்தினக்கல் சந்தையும் மேலும் இரண்டு மாடிகளில் வர்த்தகச் சந்தையும் ஏனைய மாடிகளில் வியாபாரப் பொது வசதிகள் சேவைகள் வழங்கும் பொழுதுபோக்கு விளையாட்டு நீச்சல் தடாகம் போன்ற இன்னோரன்ன வசதிகள் விடயங்கள் அடங்குவ‌தாகவும் அவர் தெரிவித்தார்.

இரத்தினபுரி மாநகரசபைக்கு அதிக வருமானத்தை உழைக்கும் பிரதான வருமான மார்க்கமாகவும் இக்கட்‌டிடம் அமையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தகவல் – ஏ.ஏ.எம்.பாயிஸ்

Related posts

Leave a Comment