உள்நாடு 

இலங்கையின் கடற்கொள்ளையர்களால், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்! இலங்கை கடற்படையின் பதில்!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.

நாகப்பட்டிணத்தில் இருந்து மீன்பிடிக்கச்சென்ற மீனவர்கள் மீது ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் அரிவாள், ரப்பர் பைப் மற்றும் கட்டைகளால், தாக்கி இலங்கை இலங்கையின் கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதாக முறையிடப்பட்டுள்ளது.

கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் காயமடைந்த 4 மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏற்கனவே நாகை மாவட்டம் புஷ்பவனம் மீனவர்கள் மீதும் இலங்கையின் கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.

இந்தநிலையில் இந்த இந்திய செய்தி குறித்து எமது செய்திச்சேவை கடற்படை பேச்சாளரை தொடர்புக்கொண்டு கேட்டபோது, இலங்கையின் கடற்கொள்ளையர்கள் என்பது தொடர்பாக இதுவரை இலங்கையின் கடற்படை அறிந்திருக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

Related posts

Leave a Comment