மலையகம் 

கண்டியில் இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினம்!

இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் கண்டியில் அமைந்துள்ள இலங்கைக்கான இந்திய துணை தூதரகத்தின் குடியரசு தின நிகழ்வுகள் இந்திய துணைத்தூதுவர் மாளிகையில் நடைபெற்றது. இந்திய துணைத்தூதுவர் வைத்தியர் எஸ். அதிரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.அந்த வகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் திருமதி அனுஷியா சிவராஜா, சிரேஷ்ட உபதலைவர் திரு சிவராஜா, உப தலைவர் திரு மதியுகராஜா, சட்ட உறுப்பினர் திரு சரவணன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாளர் பாரத் அருள்சாமி கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment