உள்நாடு 

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை ஆரம்பிக்க தாமதம்…

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது மேலும் தாமதமாகும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.இதனடிப்படையில் ,ஜனவரி 30 ஆம் திகதி மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் டி.ஆர் வோல்கா கூறியுள்ளார்.சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் நாளை (27) முதல் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது.இருப்பினும் ,கச்சா எண்ணெய் கொண்ட கப்பல் வருவதில் தாமதம் ஏற்பட்டமையே செயற்பாடுகளை ஆரம்பிக்க தாமதமாவதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.மேலும் ,இலங்கைக்கு கச்சா எண்ணெய் வழங்கும் நீண்ட கால ஒப்பந்தத்தில் உள்ள சிங்கப்பூர் நிறுவனத்துக்கு சொந்தமான கப்பல், கடந்த 24 ஆம் திகதி இலங்கைக்கு வரவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment