உள்நாடு 

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி இலங்கைக்கு அவசியமில்லை : மத்திய வங்கி ஆளுநர் வெளிப்படை

சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார ஒத்துழைப்பு இலங்கைக்கு அவசியமில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால்(Ajith Nivard Cabraal) தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அஜித் நிவார்ட் கப்ரால் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இலங்கையிடம் மாற்று மூலோபாய உத்தி காணப்படுமாயின் நிவாரணம் அவசியமில்லை எனவும், அடுத்த ஓரிரு வருடங்களில் அதை மிகவும் நிலையானதாக மாற்றுவதற்கான உத்தி தம்மிடம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்

இலங்கை தனது நிலுவையில் உள்ள கடனுக்கு, குறிப்பாக சர்வதேச இறையாண்மைப் பத்திரங்களுக்கு அமைய கடன் தருனர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் அதனை மீளளிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Related posts

Leave a Comment