Politics | அரசியல் உள்நாடு 

ஜனாதிபதி தலைமையில் “ஷில்ப அபிமாணி – 2021” விருது விழா…

பாரம்பரியக் கைப்பணித் துறையில் தேர்ச்சி பெற்ற கலைஞர்களின் கலைப் படைப்புகளை தேசிய மட்டத்தில் கௌரவிக்கும் “ஷில்ப அபிமாணி – 2021” பாரம்பரியக் கைப்பணித் துறைக்கான ஜனாதிபதி விருது விழா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், நேற்று (25) சிறிமாவோ பண்டாரநாயக்க மாநாடு மற்றும் கண்காட்சி மண்டபத்தில் இடம்பெற்றது.

பாரம்பரிய, கலாசார முக்கியத்துவமிக்க மற்றும் கலைப் பெறுமதிமிக்க அதி சிறந்த கலைப் படைப்புகளின் பாதுகாப்பு, அவற்றை மேம்படுத்தல் மற்றும் அவ்வாறான கலைப் படைப்புகளை வழங்கும் கலைஞர்களை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, “தேசிய ஷில்ப அபிமாணி” ஜனாதிபதி விருது விழா, வருடாந்தம் நடத்தப்பட்டு வருகின்றது.

8,000 கலைப் படைப்புகளிலிருந்து மாகாண மட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்களுக்கு, வெள்ளி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்த விருது விழாவைக் கருப்பொருளாகக் கொண்டு உருவாக்கப்பட்ட முத்திரை மற்றும் அட்டைப்படம் போன்றன, ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்களினால் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டன.

“ஷில்ப அபிமாணி – 2021” கலைப் படைப்புப் போட்டியில் வெற்றி பெற்ற கலைப் படைப்புகளைப் பார்வையிட்ட ஜனாதிபதி, அப்படைப்புகளை உருவாக்கிய கலைஞர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

Related posts

Leave a Comment