Jafna | யாழ்ப்பாணம் 

தமிழ் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையை உடைக்க திரைமறைவு நகர்வு

தற்காலிகமாகவேனும் ஒரு தீர்வை எட்டவேண்டும் என்பதற்காக 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஓரணியாக தமிழ் தேசியக் கட்சிகள் கையெழுத்திட்டு இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பும்வேளை, அதனை குழப்புவதற்காக ஏதோவொரு திரைமறைவு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு பின்னால் நின்றுகொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் செயலாற்றுகின்றனர் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் (Vino Nokarathalingam) தெரிவித்தார்.

வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மண்டபத்தில் மறைந்த ஊடகவயிலாளர் சுகிர்தராஜனின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்ட போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,

“கடந்த அரசாங்கம் போலவே இந்த அரசாங்கமும் மீண்டும் மீண்டும் தமிழ் தேசியக் கட்சிகளை ஏமாற்ற முயற்சிக்கின்றன.

நாம் சர்வதேசத்தின் ஆதரவைப் பெற்றால் தான் நீண்ட காலமாக புரையோடிப்போயிருக்கின்ற அரசியல் தீர்வாக இருந்தாலும் அல்லது இனப்பிரச்சினைக்கான நீடித்து நிலைக்க கூடிய தீர்வாக இருந்தாலும் அதற்கு சர்வதேசத்தின் தலையீடு இல்லாமல் மகிந்த – கோட்டாபய கூட்டுக் குடும்ப அரசாங்கம் எந்த தீர்வையும் வழங்காது என்பது இப்போது எமக்கு தெரிந்த விடயமாகவே உள்ளது.

Related posts

Leave a Comment